சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 3:17PM by PIB Chennai
அரசியலைமைப்பு தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், துறைசார்ந்த அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை கூட்டாக வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பு லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியை ஏற்றனர். அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரம், நீதியை பாதுகாத்தல், சிந்தனை, நம்பிக்கை, மதம், வழிபாட்டுச் சுதந்திரம், சமத்துவத்தை ஊக்குவித்தல், தனிநபரின் கண்ணியம், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்தல், சகோதரத்துவத்தை வளர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த கூட்டு உறுதிமொழி வலியுறுத்தியது.
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அன்று அரசியலமைப்பு சபையால் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341899®=3&lang=1
***
SK/LN/SU