அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நூலக சேவைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: சிஎஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:59PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நூலகச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புதுதில்லியில் உள்ள தேசிய அறிவியல் தொடர்பியல், கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர்), நவம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூன்று நாள் திறன் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது.

சிஎஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சியில், நூலகத் துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

தொடக்க நிகழ்ச்சியில், பயிற்சிப் பிரிவுத் தலைவர் திரு முகேஷ் ஏ. பண்த், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், நூலகச் சேவைகளில் அதன் பயன்பாடு, உரையாடல் தளங்கள், தானியங்கி பட்டியலிடுதல், தகவல் தேடல், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சுருக்கம், பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு, உண்மைத் தகவல் சரிபார்ப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நவம்பர் 18-ம் தேதி, இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் ரித்தேஷ் யாதுவன்ஷி, ஆராய்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் குறித்து சிறப்புப் பயிற்சி அளித்தார். செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்களை நம்பகமான ஆதாரங்களுடன் சரிபார்ப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நவம்பர் 19-ம் தேதி நிறைவு பெற்ற இப்பயிற்சி, நூலகப் பணிகளை எளிதாக்குவதுடன் தகவல்களை விரைவாகப் பெறவும் உதவும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342011&reg=3&lang=1       

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342528) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी