நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைதீர்ப்பு மதிப்பீடு, குறியீட்டு தரவரிசையில், நிதிச் சேவைகள் துறையின் ஓய்வூதியச் சீர்திருத்தப் பிரிவு முதலிடம் பிடித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:58PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  வெளியிட்ட அக்டோபர் 2026-க்கான குறைதீர்ப்பு மதிப்பீடு மற்றும் குறியீட்டில், நிதிச் சேவைகள் துறையின் ஓய்வூதியச் சீர்திருத்தப் பிரிவு, 500-க்கும் குறைவான குறைகளைப் பதிவு செய்த அமைச்சகங்கள்/துறைகள் இடம்பெற்றுள்ள குழு பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தச் சாதனை, “தடையற்ற, காலவரையறைக்குட்பட்ட, பரிவுணர்வுடன் கூடிய தீர்வு” வழங்குவதில் நிதிச் சேவைகள் துறை கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை, குறைகளைத் தீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், குடிமக்களிடமிருந்து பெறப்படும் குறைகளுக்கு விரைவான, பயனுள்ள, திருப்திகரமான தீர்வை உறுதி செய்வதற்கும் நிதிச் சேவைகள் துறை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைக்கிறது.

2024 ஜனவரி மாதம் முதல், நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், தீர்க்கப்பட்ட குறைகளில் இருந்து தலா 20 குறைகளைத் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்து, மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இத்தகைய நடைமுறை, மக்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342207&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342321) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese