ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் நில ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கல் பணிகள் குறித்து இலங்கை அதிகாரிகள் குழுவுக்கு விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 5:49PM by PIB Chennai

இந்தியாவின் நில நிர்வாக முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளங்கள் துறை, இந்தியா வந்துள்ள இலங்கை அரசு அதிகாரிகள் குழுவுடன் இன்று (26.11.2026) கலந்துரையாடியது. தேசிய நல்லாட்சி மையம் ஒருங்கிணைத்த இந்தப் பயணத்தில், இலங்கையின் கூடுதல் நில ஆணையர் திருமதி குணவர்தன தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

இந்திய நில வளங்கள் துறைச் செயலர் திரு திலீப் குமார், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, விரைவான சேவை ஆகியவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது வெளிப்படையான, திறன் வாய்ந்த, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்திற்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

நில வளங்கள் இயக்குநர் திரு ஷியாம் குமார், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம், நக்ஷா திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும், நிலப் பதிவுகளுடன் சொத்துப் பதிவு முறையை இணைத்தல், காகிதமில்லா பதிவு, தானியங்கி பெயர் மாற்றம் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய நிலத் தொகுப்பு (பாரத் லேண்ட் ஸ்டாக் - Bharat Land Stack) என்ற ஒருங்கிணைந்த புவியியல் தகவல் தளத்தின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன. இந்தச் சந்திப்பு இந்தியா, இலங்கை இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் வகையில் அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342088&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2342088)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342293) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese