இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 4:36PM by PIB Chennai
ஆர்க்டிக் பகுதியில் உள்ள நை-ஆலெசுண்ட், அண்டார்டிகா பகுதியில் உள்ள மைத்ரி ஆகிய இந்திய ஆராய்ச்சி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள காமா-கதிர் கண்டறியும் அமைப்புகள் மூலம், தரைமட்ட அளவிலான மேம்பாடு எனப்படும் அரிய, தீவிர சூரிய நிகழ்வுகளைக் கண்டறியும் புதிய அணுகுமுறையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான இந்திய புவிக்காந்தவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், 2025 நவம்பர் 11 அன்று நிகழ்ந்த சூரிய நிகழ்வின் தடயங்களை இரு துருவ ஆராய்ச்சி நிலையங்களிலும் உள்ள காமா-கதிர் கண்டறியும் அமைப்புகள் மூலம் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்கமான நியூட்ரான் கண்காணிப்புக் கருவிகளை விடக் குறைந்த செலவிலான, காமா-கதிர் கண்டறியும் அமைப்புகளின் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், சூரியன்-பூமி இடையிலான தொடர்புகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341985®=3&lang=1&_gl=1
****
SK/PD/SH