57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஸ்மார்ட்போன் நம்மைக் கட்டுப்படுத்துகிறதா? டிஜிட்டல் அடிமைத்தனம் குறித்து எச்சரிக்கும் ‘ஸ்க்ரோல்’ தமிழ்த் திரைப்படம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:32PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342225Views: 10

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாவது, இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, கைப்பேசி செயலிகளை அதிகம் பயன்படுத்துவது ஆகியவற்றின் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘ஸ்க்ரோல்’ (SCROLL), கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநரும், தயாரிப்பாளருமான கண்ணன் எஸ் இயக்கியுள்ள இப்படம், இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் மதிப்புமிக்க யுனெஸ்கோ காந்தி பதக்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் இதுவாகும். 128 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவியல் திகில் திரைப்படமான இது, முழுவதும் ஸ்மார்ட்போன் திரையின் வழியாகவே கதை சொல்லும் புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர், அதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்கிறார். தொடக்கத்தில் விளையாட்டு சார்ந்த செயல்பாடு, பரிசுகள் ஆகியவை மூலம் விடுதலை அளிப்பதாகத் தோன்றும் அந்தச் செயலி, பின்னர் ஆபத்தான சவால்களாகவும் மனரீதியான துன்புறுத்தலாகவும் எவ்வாறு மாறுகிறது என்பதே படத்தின் கதை.

இயக்குநர் கண்ணன் பேசுகையில், உண்மை, அகிம்சை, சுயக்கட்டுப்பாடு ஆகிய காந்தியக் கொள்கைகள் தொழில்நுட்ப உலகில் இன்றும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். ‘ப்ளூ வேல் சவால்’ போன்ற உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் டிஜிட்டல் அடிமைத்தனம் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அறிவுரையாகக் கூறாமல், விறுவிறுப்பான திரைப்படத்தின் மூலம் சமூகச் செய்தியைச் சொல்ல விரும்பியதாகவும் அவர் கூறினார்.

கதாநாயகன் அரவிந்த் சுந்தர் பேசுகையில், பலரது அன்றாட வாழ்க்கையே கதாபாத்திரத்துக்கான பயிற்சியாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். நடிகை காவ்யா அனில் பேசுகையில், தொழில்நுட்பம் மனிதர்களை இணைத்து அவர்களுக்குப் பயன் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கட்டுப்படுத்தி சிக்கலை ஏற்படுத்தவும் முடியும் என்பதைப் படம் எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பை திரு சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342194&reg=3&lang=1

(Release ID : 2342194)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342225
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026