ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ஆயுஷ் அரங்கிற்குப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 2:58PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், ஆயுஷ் பாரம்பரியத்திலிருந்து ஆரோக்கியமான இந்தியாவின் வளர்ச்சி என்ற கருப்பொருளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்குப் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு டி அலர்மேல்மங்கை நேற்று (2026 நவம்பர் 25) இந்த அரங்கைப் பார்வையிட்டுக் கண்காட்சி ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த அரங்கில், வழிகாட்டுதலுடன் கூடிய யோகா அமர்வுகள், சூரிய நமஸ்கார செயல்விளக்கங்கள், ஆயுர்வேத கற்றல் விளையாட்டுகள், மெய்நிகர் தொழில்நுட்ப அனுபவங்கள் ஆகியவை குழந்தைகள், இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இலவச மருத்துவ ஆலோசனைகளுடன் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் சார்பில் இலவச மூலிகைக் கன்றுகள் வழங்கப்படுவதோடு, சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341877&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342204) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese