சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு தினம் 2026: 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்திய அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:31PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் சட்டமன்றத் துறை சார்பில், அரசியலமைப்பு தினம் 2026-ஐ முன்னிட்டு புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்திய அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டார். மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், சட்டம் இயற்றல் துறை, சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தையும், அரசியலமைப்பு வலியுறுத்தும் மாண்புகளை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை நாட்டிற்கு வழங்கிய வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். இந்திய ஜனநாயகக் கட்டமைப்பின் அடித்தளமாக அரசியலமைப்பு திகழ்கிறது எனக் குறிப்பிட்ட அவர், குடிமக்களிடையே அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், வலியுறுத்தும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். முன்னதாக வரவேற்புரையாற்றிய டாக்டர் ராஜீவ் மணி, அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு முதல் முறையாக, 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341972&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342189) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati