சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு முகப்புரையைக் வாசித்து மத்திய சுகாதார அமைச்சகம் அரசியலமைப்பு தினத்தைக் கடைப்பிடித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 11:52AM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் புதுதில்லியில் உள்ள கர்த்தவ்ய பவனில் இன்று (26.11.2026) இந்திய அரசியலமைப்பு முகப்புரையைக் வாசித்து அரசியலமைப்பு தினத்தைக் கடைப்பிடித்தனர். இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், அதன் முகப்புரையில் கூறப்பட்டுள்ள கொள்கைகள், லட்சியங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் நேரில் பங்கேற்றனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய சுகாதார ஆணையம், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் காணொலி காட்சி வாயிலாக இணைந்தனர்.

1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் வழிநடத்தும் அரசியலமைப்பு மாண்புகள் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341733&reg=3&lang=1

***

SS/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342158) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi