புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 12:10PM by PIB Chennai
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை எளிதில் அணுகும் வகையில் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் உருவாக்கியுள்ள இ-சாங்கியிகி இணையதளத்தில் மாநில தகவல் வசதி (டேஷ்போர்டு) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இணையதளத்தில் 13.9 கோடிக்கும் அதிகமான பதிவுகளைக் கொண்ட 1,109 தரவுத் தொகுப்புகளுடன், 43 புள்ளிவிவரத் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மாநில தகவல் வசதி, வேளாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், பாலினம், உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்ட 10 முக்கியப் பிரிவுகளின் கீழ், 21 வகையான புள்ளிவிவரத் தயாரிப்புகளின், 283 குறியீடுகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. பயனர்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலம், பிரிவைத் தேர்ந்தெடுத்து விவரங்களைப் பார்வையிடலாம் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளை ஆய்வு செய்யலாம்.
தரவுகள், வரைபடங்களைப் பதிவிறக்கம் செய்யவும், பகிரவும், இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொள்கை உருவாக்கம், திட்டமிடல், ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக மாநில அளவிலான புள்ளிவிவரங்களை வெளிப்படையாகவும், பயனுள்ள வகையிலும் அணுகுவதை மேம்படுத்தும் நோக்கில், இத்தகவல் பலகையில் கூடுதல் விவரங்கள் தொடர்ந்து சேர்க்கப்படும். இ-சாங்கியிகி இணையதளமான https://esankhyiki.mospi.gov.in மூலம் இந்த வசதியைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341737®=3&lang=1&_gl=1
***
SS/PD/PS