அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் இரண்டு, மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 6:54PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், ஹெல்த்எக்ஸ் எலிவேட் 2026 நிகழ்வில் உரையாற்றியபோது, ​​இந்தியாவின் விரிவடைந்து வரும் புத்தொழில் நிறுவன சூழலமைப்பு, உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரப் புத்தாக்கத் துறைகளில் வளர்ந்து வரும் திறன்கள், சுகாதாரத் துறையை மாற்றுவதில் செயற்கை நுண்ணறிவு, மரபணுவியல், துல்லிய மருத்துவத்தின் அதிகரித்து வரும் பங்கு பற்றி எடுத்துரைத்தார்.

இந்தியாவின் புத்தொழில் நிறுவன சூழல் வியக்கத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2014-ல் சுமார் 350-ஆக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, இன்று 2.5 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் நிறுவன சூழலைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இரண்டு, மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேளாண்மை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்ட அவர், தொழில்முனைவோராக வெற்றி பெறுவதற்கு மிக உயர்ந்த கல்வித் தகுதி அவசியமில்லை என்றும், அதற்கு மாறாக, ஆர்வம், கவனம், தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தும் திறன் ஆகியவை தேவை என்றும் கூறினார். தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அரசு தொழில்நுட்ப, நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341477&reg=3&lang=1

***

SK/BR/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2341894) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी