சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 6:49PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா ஆகியோர், 'சமவேஷ்' (அதிகாரமளித்தல், சமூக நல்லிணக்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கான ஒற்றை அணுகல் பொறிமுறை), புதிய இ-அனுதான் இணையதளத்தைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் வீரேந்திர குமார், நலத்திட்டங்களையும், சேவைகளையும் வழங்குவதை வலுப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தங்களது துறை கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். துறையின் டிஜிட்டல் சேவைகளை ஒரு பொதுவான தளத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், ஒருங்கிணைந்த, வெளிப்படையான, குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாக சமவேஷ் அமைகிறது என்று அமைச்சர் கூறினார்.
நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் அணுகல்தன்மை, வெளிப்படைத்தன்மை, செயல்திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, தரவு சார்ந்த கண்காணிப்பின் முக்கியத்துவத்தையும் டாக்டர் குமார் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341474®=3&lang=1