மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தலைமையில் இந்தியக் கல்வியை சர்வதேசமயமாக்குவது குறித்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 7:54PM by PIB Chennai

மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி, 2026-ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, உயர்கல்வித் துறைச்  செயலாளர் திருமிகு  தீப்தி கௌர் முகர்ஜி, பள்ளி கல்வி, எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு  டி. கே. அனில் குமார், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை வெளிநாடுகளில் அமைப்பதற்கும், அதேபோல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைப்பதற்கு வசதி செய்து கொடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது நாட்டில் சுமார் 21 வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இது தவிர கூட்டு கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேவை அதிகரிப்பது, இந்தியக் கல்வித் திட்டங்களின் நம்பகத்தன்மையையும், உலகளாவிய அளவில் அவற்றை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341525&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341641) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Assamese , Gujarati