பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான பயிலரங்கு கோவாவில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 4:51PM by PIB Chennai

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான முதலாவது பயிலரங்கு கோவாவில் 2026 நவம்பர் 26 அன்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நடத்துகிறது. இதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக இணைச்  செயலாளர் திருமதி முக்தா சேகர், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்து மேற்கு மண்டல மாநிலங்களிடையே பொதுவான புரிதலை உருவாக்குவது இப்பயிலரங்கின் நோக்கமாகும். இதனால் நிதி ஆணையத்தின் மானியங்கள் உரிய நேரத்தில் பஞ்சாயத்துகளுக்கு சென்றடைவதையும், அது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களையும் உறுதிசெய்ய முடியும்.

16-வது நிதிக்குழு 2026 – 27-ம் ஆண்டு முதல் 2030 - 31-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு அனைத்து 28 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூ.4,35,236 கோடி மானியமாக வழங்க பரிந்துரைத்துள்ளது.

நிதியமைச்சகத்தின் செலவினத்துறை இந்த மானியங்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை 2026 மே 21 அன்று வெளியிட்டது.

அத்துடன் மாநிலங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் அளிக்குமாறும் பரிந்துரைகளின் அம்சங்கள் குறித்து மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த பிராந்தியப் பயிலரங்குகளை நடத்துமாறும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341296&reg=3&lang=1&_gl=1

****

SK/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341585) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi