இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 3:59PM by PIB Chennai
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில், கர்நாடக மாநிலம், யெலஹங்காவில் உள்ள விமானப் படை தளத்தில், 2027 பிப்ரவரி மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஏரோ இந்தியா- 2027 என்ற விமானக் கண்காட்சி, சர்வதேச விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன. உள்நாட்டு, உலகளாவிய பார்வையாளர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளதால், கண்காட்சிக்கான இடங்களை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி துறையானதும் ஏரோ இந்தியா-2027 கண்காட்சிக்காக உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. கண்காட்சி நடத்த திட்டமிட்டிருந்த பரப்பளவை காட்டிலும், விமானப் படைத்தளத்தில் 12,000 சதுர மீட்டர் அதிகமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் கண்காட்சிக்கான இடங்களை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யெலஹங்கா தளமானது இந்திய விமானப் படையின் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயங்குவதால், கண்காட்சிக்கான அரங்குகளை கிடைமட்டமாக விரிவாக்கம் செய்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, விரிவாக்கப் பணிகள் செங்குத்தான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒட்டுமொத்த தளத்தின் கொள்ளளவை கணிசமான முறையில் விரிவுபடுத்தும் வகையில் 2 புதிய காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து கட்டமைப்புகளும் உறுதித்தன்மையுடனும், சுமைகளை தாங்கும் திறன், பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியா-2027 நிகழ்ச்சியில் சர்வதேச அளவிலான விண்வெளித்துறை தலைவர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், புத்தாக்க படைப்பாளர்கள், தங்களுடைய அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை வெளிப்படுத்த போதிய வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்த விரிவாக்க பணியை பாதுகாப்புத்துறை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341213®=3&lang=1&_gl=1
****
SK/LN/SH