இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 5:42PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் எவத்மாலில் உள்ள பிரியதர்ஷினி சஹாகரி சூட் கிரினியில் லோக்மாத் ஊடக குழுமத்தின் நிறுவனரும், பத்திரிகையாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த ஜவஹர்லால் தார்தாவின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் இன்று திறந்துவைத்தார்.
முன்னதாக அவர் எவத்மாலில் பிரயர்னா ஸ்தலத்திற்கு சென்று மறைந்த ஜவஹர்லால் தார்தாவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பாபுஜியின் வாழ்க்கை தேசபக்தி, பொதுசேவை, சமூகத்திற்கான அர்ப்பணிப்பு மிக்க பயணமாக இருந்தது என்று விவரித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பாக 1942-ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவருடைய பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்த அவர், சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் ஆளுமையாக, மக்கள் பிரதிநிதியாக, அமைச்சராக, பத்திரிகையாளராக நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றினார் என்று கூறினார். மகாராஷ்டிராவின் வளர்ச்சி, நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் அவருடைய பங்களிப்புகளை எடுத்துக்கூறினார்.
மறைந்த தார்தா தொழில்துறை, எரிசக்தி, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியதாக குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சமச்சீரான முறையில் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்த 1993-ம் ஆண்டின் அவருடைய முக்கிய தொழில் கொள்கையை நினைவுகூர்ந்தார்.
அத்துடன் எவத்மாலில் அரசு மருத்துவக்கல்லூரியை அமைப்பதற்கு பாபுஜி ஆற்றிய பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், அது அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டுசெல்வதில் அவருடைய அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341400®=3&lang=1&_gl=1
****
SK/IR/LDN/SH