ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற மகளிருக்கு குறைந்த வட்டியில், பாதுகாப்பான, விரைவான கடன்: மத்திய ஊரக வளர்ச்சித் துறை - நபார்டு வங்கி இடையே ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 5:35PM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான வட்டி மானியத் திட்டம், மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றின் நிர்வாக, தொழில்நுட்ப ஆதரவுக்காக மத்திய ஊரக வளர்ச்சித் துறையும் நபார்டு வங்கியும் இன்று (2026 நவம்பர் 25) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் திரு ரோஹித் கன்சால், நபார்டு தலைவர் டாக்டர் ஷாஜி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இவ்விரு திட்டங்களுக்கான வட்டி மானிய இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் திரு ரோஹித் கன்சால், சுயஉதவிக் குழுக்களுக்கு இதுவரை ரூ. 14 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கூடுதலாக ரூ. 10 லட்சம் கோடியும், தனிநபர் தொழில்களுக்கு ரூ. 1 லட்சம் கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வட்டி மானியம் கடனை எளிதாக்கும் எனவும், உத்தரவாதக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்துவது கடனைப் பாதுகாப்பானதாக்கும் எனவும், புதிய இணையதளம் செயல்முறையை விரைவுபடுத்தும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பொதுத்துறை, தனியார் துறை, சிறு நிதி நிறுவனங்கள், பிராந்திய ஊரக, கூட்டுறவு வங்கிகளை உள்ளடக்கிய இவ்விரு திட்டங்களுக்கும் நபார்டு வங்கி ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படும். இதன் மூலம் லட்சாதிபதி சகோதரிகள் கிராமப்புறத் தொழில்முனைவோராக முன்னேற்றம் அடைவதற்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341392&reg=3&lang=1&_gl=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341556) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Assamese