இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 5:00PM by PIB Chennai
கிராமப்புற குடிநீர் உள்கட்டமைப்பின் நீண்டகாலப் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், கிராமப்புற இளைஞர்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் திறன் மேம்பாடு-தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பயிற்சித் தலைமை இயக்குநரகம் ஆகியவை இணைந்து ‘நல் ஜல் மித்ரா’ திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல், இணையமைச்சர்கள் திரு. வி. சோமண்ணா மற்றும் திரு. ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 16 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்கக் குறைந்தபட்சம் 1,00,000 இளைஞர்களுக்கு ₹111.93 கோடி மதிப்பீட்டில் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் ஃபிட்டர் மற்றும் பிளம்பர் பிரிவுகளில் பயிலும் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 120 மணி நேர நிறுவனப் பயிற்சியும், கிராமப்புற குடிநீர் திட்டங்களில் 45 மணி நேர நேரடிப் பணிப் பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சி முடிப்பவர்களுக்கு தேசியத் தொழிற்சான்றிதழுடன், தேசிய திறன் தகுதி கட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற குறுகிய காலப் பயிற்சிச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341316®=3&lang=1&_gl=1
****
SK/NB/SH