சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அங்கீகரிக்கப்பட்ட பணியால் நிதிச் சுமையில் இருந்து மீண்டு வந்த தூய்மைப் பணியாளர்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 4:30PM by PIB Chennai
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான தூய்மைப் பணியாளர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒப்பந்தமுறையில் கழிவுநீர் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வந்தார். தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்டார். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார தேசிய செயல் திட்டத்தின் மூலம், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட பணி வழங்கப்பட்டது. பட்டதாரியான ராஜாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை கிடைத்தது. இதன்மூலம் அவருக்கு மாதம் 14,400 ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. நிரந்தரமான பணியால், நிதிச் சுமையில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341254®=3&lang=1&_gl=1
****
SK/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2341538)
வருகையாளர் எண்ணிக்கை : 9