சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 NOV 2026 5:12PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி.எல். வர்மா ஆகியோர் நாளை புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'சமாவேஷ்' மற்றும் புதிய 'இ-அனுதான்' இணையதளங்களைத் தொடங்கி வைக்கின்றனர்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் 20-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஒருங்கிணைக்கும் ஒற்றை டிஜிட்டல் நுழைவாயிலாக 'சமாவேஷ்' செயல்படும். இதில் 'பாஷினி' தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் 'சமூக சகாயக்' மூலம் 22-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் குடிமக்கள் தகவல்களைப் பெறலாம். மேலும் டிஜிலாக்கர், பொது நிதி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது.
புதிய 'இ-அனுதான்' இணையதளம் போதைப்பொருள் தடுப்புத் திட்டம், ஸ்மைல், அடல் வயோ அப்யுதய் யோஜனா, ஸ்ரேஷ்டா ஆகிய நான்கு முக்கியத் திட்டங்களின் மானிய உதவி நடைமுறைகளை எளிதாக்குவதுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான வெளிப்படைத்தன்மையையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தும். இந்நிகழ்வில் பாஷினி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340843®=3&lang=1
***
SK/EA/SH