இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 3:51PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைப் பிரிவை சேர்ந்த மருத்துவ குழுவினர் பங்கேற்று கண் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இம்முகாமில் 412 பேருக்கு விலை இல்லாமல் பார்வை மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில், கண்புரை, கண் அழுத்த நோய், விழித்திரை, கண் சவ்வுப் படலம் ஆகியவற்றுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. இதன்மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பயன்பெற்றனர். இதுமட்டுமின்றி கடந்த 2 மாதங்களில், பாக்பத், புலந்த்ஷாஹர், ஹாபூர், மொராதாபாத் ஆகிய பகுதிகளில், 12,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண்புரை, பிற கண் நோய்களுக்கு ஆயுதப் படைகளின் மருத்துவ சேவை பிரிவை சேர்ந்த மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. தொலைதூர கிராமங்களில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுவதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341201®=3&lang=1&_gl=
***
SS/LN/SH