இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 12:01PM by PIB Chennai
பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டத்தின் பூ ஹவெலியான் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் செளகான் கலந்துகொண்டு உரையாற்றினார். விவசாயிகளுடன் வயல்வெளியில் அமர்ந்து அவர்களுடைய பிரச்சனைகளையும் கருத்துக்களையும் அவர் கேட்டறிந்தார். பயிர்க் கழிவுகளை எரிக்காமல் நவீன வேளாண் முறைகளை பின்பற்றக்கூடிய முற்போக்கு விவசாயிகளையும் பஞ்சாயத்துக்களையும் திரு செளகான் பாராட்டினார். தான் ஒரு பெரிய அரசியல் கூட்டத்தை நடத்துவதற்காக வரவில்லை என்றும், ஒரு சேவகராக அமர்ந்து அவர்களுடைய கவலைகளை புரிந்துகொள்ளவே வந்ததாக அவர் தெளிவாக குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை பஞ்சாப் அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகளை செயல்படுத்துதல், குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவிற்கு கொள்முதல் செய்தல் ஆகியவற்றில் பிரதமர் மோடி அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளதாக அவர் கூறினார்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளிக்க விவசாயிகள் இரவு பகலாக பணியாற்றுகின்றனர் என்று அவர் தெரிவித்தார். தாம் ஒரு தலைவர் அல்ல என்றும், விவசாயிகளின் சேவகர் என்றும் அவர் கூறினார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும், தான்தோன்றித்தனம், பொறாமை, வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் குரு நானக் தேவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341083®=48&lang=1&_gl=1
***
SS/IR/LDN/PS