கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் (இஃபி) இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் ‘சர்வம் மாயா’ என்ற மலையாளத் திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து அதன் இயக்குநர் திரு அகில் சத்யன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். நிவின் பாலி, ரியா ஷிபு ஆகியோர் நடித்துள்ள இப்படம், கோயிலில் நாத்திகராக இருந்து அர்ச்சகராக மாறிய ஒருவரைச் சந்தித்த அன்றாட அனுபவத்திலிருந்து உருவானதாக அவர் தெரிவித்தார். நாத்திக அர்ச்சகருக்கும் இளம்பெண்ணின் ஆன்மாவிற்கும் இடையிலான நட்பின் வழியே நம்பிக்கை, இழப்பு, அன்பு மற்றும் மனித உணர்வுகளை இப்படம் ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.
கதைக்குத் தேவையற்ற வன்முறைக் காட்சிகளை நம்பியிருக்காமல், நாடகத்தன்மை மற்றும் விறுவிறுப்பிற்கு இணையாக நகைச்சுவையாலும் பார்வையாளர்களைக் கவர முடியும் என்று திரு அகில் சத்யன் வலியுறுத்தினார். தமது தந்தை திரு சத்யன் அந்திக்காடு, திரு மணிரத்னம், திரு சீனிவாசன் ஆகியோரின் தாக்கத்தை நினைவுகூர்ந்த அவர், புதிய தலைமுறை இயக்குநர்கள் ஒரு வலுவான கருவைக் கொண்டு இரண்டு நிமிடக் குறும்படத்தை எழுதி, படமாக்கித் தங்களது திரைப் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340866®=3&lang=1
****
SK/SE/SH