வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் அபேடா சார்பில் ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஃபரூக்காபாத்தில் இருந்து கத்தாருக்கு முதல் முறையாக பச்சைப் பட்டாணி ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 10:49AM by PIB Chennai

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) சார்பில், வாரணாசியில் 2026 நவம்பர் 20 அன்று ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அபேடா தலைவர் திரு அபிஷேக் தேவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் இருந்து கத்தாருக்கு முதல் முறையாக 63 மெட்ரிக் டன் உறைவிக்கப்பட்ட பச்சைப் பட்டாணி, காய்கறிகள் கலவை கொண்ட சரக்குப் பெட்டக ஏற்றுமதி காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. நவ சேவா துறைமுகம் வழியாக தோஹாவுக்கு மேற்கொள்ளப்படும் இந்த ஏற்றுமதி, உத்தரப் பிரதேசத்தின் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண்பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பாரத் கிருஷி நிர்யாத் திட்டம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் பாரதி முன்முயற்சி குறித்து அபேடா தலைவர் எடுத்துரைத்தார். ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் வேளாண் துறை அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340721&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340821) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu