சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்கச் சாவடி வருவாய் 26.95 சதவீதம் அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 5:20PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையை மாற்றி, தடையற்ற போக்குவரத்து தொழில்நுட்பத்தின் மூலம், தடையற்ற சுங்கக் கட்டண முறையை செயல்படுத்தி வருகிறது. இதனால் வாகனங்கள், சோதனை சாவடிகளில் நிற்காமல் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாக அமைந்துள்ளது.  தடையற்ற சுங்கக் கட்டண முறையானது மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு வருவாயை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பரனூர் உள்ளிட்ட 7 தடையற்ற சுங்கச் சாவடிகள் மூலம், நிகர வருவாயில் 19.84 சதவீத வருமானம் உயர்ந்துள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் 2026 அக்டோபர் 1-ம் தேதி அன்று தடையற்ற சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வந்த நிலையில், தற்போது இதன் வருவாய் 26.95 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பரனூர் உள்ளிட்ட 7 தடையற்ற சுங்கச் சாவடிகள் மூலம், ரூ.538.95 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது முந்தைய காலகட்டத்தை காட்டிலும் சுமார் ரூ.89.23 கோடி கூடுதல் வருவாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340415&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340569) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी