புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 5:32PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீடு, தொழில்துறை உற்பத்திக் குறியீடு ஆகியவற்றின் புதிய வரிசை குறித்த தரவுப் பயனர்கள் மாநாட்டை மும்பையில் இன்று (2026 நவம்பர் 23) நடத்தியது. திருத்தப்பட்ட குறியீடுகளின் மாற்றங்கள், தரவு ஆதாரங்கள் குறித்து பயனர்களுக்கு விளக்கும் வகையில் இம்மாநாடு நடைபெற்றது.
மத்திய புள்ளியியல் துறை தலைமை இயக்குநர் டாக்டர் தலிப் சிங், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டாக்டர் பூனம் குப்தா, எச்டிஎஃப்சி முன்னாள் தலைவர் திரு தீபக் பரேக் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினர். வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை எட்ட ஆதாரப்பூர்வமான கொள்கை உருவாக்கம் அவசியம் என டாக்டர் சௌரப் கார்க் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்று தொழில்நுட்ப அமர்வுகளில், புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீடு, தொழில்துறை உற்பத்திக் குறியீடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை ஆண்டு மாற்றங்கள், மேம்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340427®=3&lang=1
****
SK/PD/SH