நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவின் ரேவாரியில் வரி ஏய்ப்பு செய்து இயங்கி வந்த ஆலை கண்டுபிடிப்பு: 4 இயந்திரங்கள் பறிமுதல்; ஒருவர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 10:10AM by PIB Chennai

ஹரியானா மாநிலம் ரேவாரி, ராம் கர் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஃபரிதாபாத் மத்திய சரக்கு, சேவை வரி ஆணையரக அதிகாரிகள் 2026 நவம்பர் 16 அன்று சோதனை நடத்தினர். சுகாதாரப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக்கான செஸ் வரியைச் செலுத்தாமல் பான் மசாலா தயாரிப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொண்டபோது, ‘தன்ராஜ்’ என்ற பெயரில் பான் மசாலா பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 4 பாக்கெட் அடைப்பு இயந்திரங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ஹெச்எஸ்என்எஸ் செஸ் சட்டம், 2025-ன் கீழ் பதிவு செய்யாமலும், இயந்திரங்கள் குறித்த தகவல்களை வழங்காமலும் இந்நிறுவனம் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் ரூ.116.48 கோடி அளவுக்கு செஸ் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338858&reg=3&lang=1

***

SS/PD/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340278) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Nepali , हिन्दी , Punjabi