மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் ஒரு பகுதியாக புகைப்படப் போட்டியும் பஜனையும் இடம்பெற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 7:49PM by PIB Chennai

காசி தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வின் ஒரு பகுதியாக புகைப்படப் போட்டி இன்று நடைபெற்றது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஹரிச்சந்திர கணவாய் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமகோடீஸ்வர் கோயிலை பார்வையிட்டு அதன் தனித்துவம் மிக்க கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்களையும் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் பதிவுசெய்தனர். இதனால் கோவிலின் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவத்தை ஆழமாக அவர்கள் அறிய முடிந்தது.

காஞ்சி காமகோடி பீடத்துடன் தொடர்புடைய காமகோடீஸ்வர் கோவில் அதனுடைய தனித்துவம் மிக்க இந்திய கட்டடக் கலை மரபுகளுக்கும், ஆன்மீக மகத்துவத்திற்கும் சிறப்பு பெற்றதாகும். அங்குள்ள சிவ பஞ்சாயாதனா பாரம்பரிய கட்டிடக்கலை முறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளன.

அப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவரான குஷி யாதவ், அக்கோவிலின் கட்டக்கலை போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளதாக விவரித்தார். கோவிலின் வரலாறு, அதன் தனித்துவமான அம்சங்கள் குறித்து அறிந்தது சிறப்பான அனுபவம் என்றும் அவர் கூறினார்.

காசி - தமிழ் கலாச்சார சங்கமத்தை நேரடியாக உணரவும் அப்பகுதிகளுக்கு இடையேயான பொதுவான மரபுகளை அறிந்துகொள்ளவும் தமக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் மாலை பஜனை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340039&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340264) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati