இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 10:28AM by PIB Chennai
சர்வதேச மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான 2026 நவம்பர் 25 அன்று தேசிய பாலின விழிப்புணர்வு இயக்கத்தின் ஐந்தாவது பதிப்பான புதிய விழிப்புணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி என்ற பிரச்சாரத்தை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தொடங்க உள்ளது.
நலிவடைந்தோர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் 2026 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இந்த இயக்கத்தின் பிரச்சாரம் நடைபெறும்.
தேசிய அளவிலான இப்பிரச்சாரத்தை மத்திய ஊரக மேம்பாடு, வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் புதுதில்லி என்ஏஎஸ்சி வளாகத்தில் உள்ள பாரத ரத்னா சி சுப்பிரமணியம் அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
அணுகல் என்ற நிலையிலிருந்து அதிகாரமளித்தல் என்ற நிலைக்கு: வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வாழ்வாதாரங்கள், சமமான வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் மகளிருக்கும் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 15 அமைச்சகங்கள், துறைகள் இணைந்து வெளியிடும் அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டு ஆலோசனைகளும் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340195®=3&lang=1
***
SS/IR/LDN/GS