இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2026 6:12PM by PIB Chennai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓ-வின் (SCO) முதலாவது பண்பாட்டு நாகரிக உரையாடல் மன்றக் கூட்டம் புதுதில்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்று (2026 நவம்பர் 22) நிறைவடைந்தது. மத்திய கலாசார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா காந்தி தேசிய கலை மையம் அறிவுசார் கூட்டு அமைப்பாகச் செயல்பட்டது. 2026 நவம்பர் 20-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி இதனைத் தொடங்கி வைத்தார்.
இந்த மன்றக் கூட்டத்தில் 22 நாடுகளைச் சேர்ந்த 116 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் 4 அமைச்சர்களும், எஸ்சிஓ பொதுச் செயலாளர் திரு நூர்லான் யெர்மெக்பயேவும் இடம்பெற்றிருந்தனர்.
தொடக்க உரையில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாகரிக உரையாடல் நாடுகளிடையே அமைதி, பரஸ்பர புரிதல், நம்பிக்கையை வளர்க்க உதவும் என்று தெரிவித்தார். இந்தியாவுக்கும் மத்திய ஆசியா, சீனா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இடையிலான பழமையான கலாசாரத் தொடர்புகளை அவர் எடுத்துரைத்தார்.
நவம்பர் 21-ம் தேதி கலை, கட்டடக்கலை, பௌத்த மரபு, பட்டுப்பாதை தொடர்புகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இன்று (நவம்பர் 22) மொழி, இலக்கியம், கையெழுத்துப் பிரதிகள், சமய, தத்துவ மரபுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் நிகழ்வு எஸ்சிஓ நாடுகளிடையே கலாசார ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339975®=3
****
SK/PLM/RJ