வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின தொழில்முனைவோருக்கு அரசு கொள்முதலில் அதிக வாய்ப்பு: ஜிஇஎம் – டிஐசிசிஐ இடையே புதிய ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 11:48AM by PIB Chennai

பழங்குடியின தொழில்முனைவோர் அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் அதிக அளவில் பங்கேற்கும் வகையில், அரசு மின் சந்தை தளமான ஜிஇஎம் (GeM), இந்திய பழங்குடியின வர்த்தகக் கூட்டமைப்பான டிஐசிசிஐ-யுடன் (TICCI) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று (நவம்பர் 20, 2026) கையெழுத்தானது.

இதுகுறித்து அரசு மின் சந்தை தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் கூறுகையில், பழங்குடியின தொழில்முனைவோருக்கு அரசு கொள்முதல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் இந்த ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். பழங்குடியினரிடையே விழிப்புணர்வையும் திறன்களையும் மேலும் அதிகரித்து, ஜிஇஎம் தளத்தில் அதிக அளவில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதே எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, டிஐசிசிஐ அமைப்பு பழங்குடியின தொழில்முனைவோரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும். மாநில, தேசிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் கட்டமைப்பை உருவாக்கும்.

ஜிஇஎம், பயிற்சி, இணையதளப் பதிவு ஆகியவற்றுக்கு உதவுவதுடன், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும். இரு அமைப்புகளும் இணைந்து செயல்திட்டங்களை உருவாக்கி, முன்னேற்றத்தைக் கண்காணிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339431&reg=3&lang=1

(Release ID : 2339431)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339463) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi