கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கடும் கண்டனம்: இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த உத்தரவுப

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 9:28PM by PIB Chennai

இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆபத்தான கடல் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உடனுக்குடன் வழங்கவும் கடல்துறை நிர்வாகத் தலைமை இயக்குநரகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவசர உதவிகளை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணைக்கு மேற்கே 9 இந்தியக் கப்பல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அத்துடன், பாரசீக வளைகுடாவில் 800-க்கும் மேற்பட்ட கப்பல்களும், ஓமன் வளைகுடாவில் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களும் ‘இ-நாவிக்’ தளம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர், ஒவ்வொரு இந்திய மாலுமியின் பாதுகாப்பும் நலனுமே அரசின் தலையாய முன்னுரிமை என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338802&reg=3&lang=1

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339453) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese