இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 9:07PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஆண்டு பொதுக்கூட்ட நிறைவு அமர்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார். தனது இரண்டாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் இக்கூட்டமைப்பு, உலகளாவிய வர்த்தக அமைப்பாக உருவெடுத்து, இந்தியத் தொழில்துறையினரைச் சர்வதேசச் சந்தைகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அண்மைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 70 டிரில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய சந்தை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதை இந்திய நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச நிச்சயமற்ற சூழலுக்கு இடையிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 480 பில்லியன் டாலர் ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளதைப் பாராட்டிய அமைச்சர், 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடையத் தொழில்துறை தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார். உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கை நோக்கிய பயணத்தை இந்தியத் தொழில்துறை முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338778®=3&lang=1
***
TV/SE/SH