சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 6:43PM by PIB Chennai
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய சாலைகள் காங்கிரஸின் 85-வது வருடாந்திர மாநாட்டில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, தெலங்கானா முதலமைச்சர் திரு. ஏ. ரேவந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
சாலைக் கட்டுமானத்தில் தரம் மற்றும் பாதுகாப்பிற்கு முதலிடம் அளித்து, விரிவான திட்ட அறிக்கைகளை மேம்படுத்துவதுடன், விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
கட்டுமானச் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், எஃகு கசடு, வைக்கோலில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி-டாட்டுமின், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் மாற்று எரிபொருட்களை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338683®=3&lang=1
***
TV/NB/SH