மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கோபால் ரத்னா விருதுகள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 6:30PM by PIB Chennai

உள்நாட்டு மாட்டினங்களைப் பாதுகாத்து, அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் தேசிய கோபால் ரத்னா விருது பெறுவோரின் பட்டியலை மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.

உள்நாட்டு பசு மாடு, எருமை இனங்களை அறிவியல் முறையில் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், 2014 டிசம்பரில் தேசிய மாடுகள் (ராஷ்ட்ரிய கோகுல்) திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பால் உறபத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2026-ம் ஆண்டுக்கான விருதில் முதல் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் நாயர் முதலிடமும், குஜராத்தின் ஓடேட்ரா ராஜ்ஷிபாய் இரண்டாமிடமும், ஹரியானாவின் மதன் மோகன் யாதவ் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இரண்டாவது பிரிவில் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டிஎன்டி 93 தச்சூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முதலிடம் பிடித்துள்ளது.

 

மூன்றாவது பிரிவில் மேற்கு வங்கத்தின் சுபங்கர் நந்தி முதலிடம் பெற்றுள்ளார்.

மொத்தம் 1,583 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 நவம்பர் 26-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் தேசிய பால் தின விழாவில், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் விருதுகளை வழங்கவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339229&reg=3&lang=1

(Release ID : 2339229)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339367) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia