குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் 12-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 2:21PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் 12-வது பட்டமளிப்பு விழாவில் 2026 நவம்பர் 20-ம் தேதி அன்று கலந்துகொண்டார்.

இவ்விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், உலகளாவிய சுகாதாரத் துறையில் ‘ஒரே சுகாதாரம்’ என்ற கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என தெரிவித்தார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சூற்றுச்சூழல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையாக இருப்பதால், ஒரு துறையில் ஏற்படும் சுகாதார பிரச்சனை மற்ற துறைகளையும் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது மட்டுமின்றி, காற்று, நீர் மாசுபாடு, காலநிலை மாற்றம், நிலையற்ற சுற்றுச்சூழல் போன்றவை மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக விளங்குவதாகவும் கூறினார். எனவே, மனிதருக்கான மருத்துவம், கால்நடை மருத்துவம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். இது எதிர்காலத்தில் சுகாதாரத்திற்கு எதிரான சாவால்களை எதிர்கொள்ள தயார்படுத்தும் அம்சமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

மனிதனின் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் ஆகிய அம்சங்களை சரியாக புரிந்துகொண்டு நோய் தடுப்பு, சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உள்ளூர் சுகாதாரச் சவால்கள், சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிகிச்சைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய அரசால் 2017-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட சுகாதார கொள்கைகள் மூலம், நோயை குணப்படுத்துவது மட்டுமின்றி, தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார். மன அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவை அதிகரித்து வருவதை கண்டறிந்து, அவைகளை தடுப்பது தொடர்பான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338974&reg=3&lang=1

 

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339307) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Malayalam