அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மரபணு மருத்துவ ஆய்வில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 5:23PM by PIB Chennai

சர்க்கரை நோய், மரபணுக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற சர்க்கரை நோய் ஆய்வு தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், இளைஞர்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுவதைத் தடுப்பது முக்கியம் என்றார்.

இத்துறையில் 12-க்கும் மேற்பட்ட முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் இவற்றில் பெரும்பாலானவை உயிரித் தொழில்நுட்பத் துறை மூலமாகவும், சில அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த புதிய மூலக்கூறு சிகிச்சைகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்தார். கர்ப்பகால ஊட்டச்சத்து குழந்தைகளின் எதிர்கால உடல்நலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், குழந்தைப் பருவத்திலேயே சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கும் வழிகள் ஆகியவை குறித்தும் ஆராயப்படுகிறது என்று அவர் கூறினார்.

சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை குறித்த தவறான தகவல்களை மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தடுக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். மருத்துவர் பரிந்துரையின்றி உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உடல்நலத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் இதற்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339143&reg=3&lang=1

(Release ID : 2339143)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339296) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada