இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டு உபகரண உற்பத்தியில் மேலும் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 4:25PM by PIB Chennai

இந்தியாவை உலகளாவிய விளையாட்டுப் பொருளாதார மையமாக மாற்றுவதற்கு உள்நாட்டு விளையாட்டு உபகரண உற்பத்தி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 16-வது உலகளாவிய விளையாட்டு வர்த்தக உச்சி மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.  இளைஞர்களின் வளர்ச்சி, சமூக ஒற்றுமை, பொருளாதார வாய்ப்புகள், சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டுகளில் கேலோ இந்தியா, உடல் திறன் இந்தியா, ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவற்றின் மூலம் விளையாட்டுத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.36,441 கோடி செலவில் புதிய கேலோ இந்தியா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

விளையாட்டுப் உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1,856.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விளையாட்டு உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் தனியார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும், 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தில் விளையாட்டுத்துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339073&reg=3&lang=1

(Release ID : 2339073)

 

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339279) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati