சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 1:17PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (நவம்பர் 20, 2026) நடைபெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் 12-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், இளங்கலை, முதுகலை மற்றும் உயர் சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 324 பேருக்கு பட்டங்களும், 58 பேருக்குத் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இளம் மருத்துவர்கள் தொழில் நெறிமுறைகளையும் மனிதநேயத்தையும் பின்பற்றி, தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவக் கல்வி என்பது சமூகத்தின் மீதான ஆழமான பொறுப்பு என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, 10,000 மருத்துவ இடங்களை உருவாக்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், 666 படுக்கைகள் கொண்ட புதிய உயர் சிறப்புப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது, என்ஏபிஹெச் (NABH) முழு அங்கீகாரம் பெற்ற நாட்டின் முதல் மத்திய அரசு மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றது ஆகிய முக்கிய சாதனைகளை அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338934®=3&lang=1
***
TV/SE/SU