இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 1:45PM by PIB Chennai
ரயில்வே சார்பில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்தின் கீழ், நேற்று (2026 நவம்பர் 19) புதுதில்லியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. வடக்கு ரயில்வே தலைமை அலுவலகமும், தில்லி கோட்ட ரயில்வே அலுவலகமும் இணைந்து இம்முகாமை நடத்தின. இதில் 250-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். ஜீவன் பிரமாண் செயலி மூலம் முக அடையாளச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க இதில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 58 பேருக்கு உடனடியாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ரயில்வே ஊழியர்களும், 12 வங்கிகளின் குழுவினரும் ஓய்வூதியர்களுக்கு உதவினர். ஆதார் சரிபார்ப்புக்கும், புதுப்பித்தலுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள் உதவினர். பங்கேற்ற ஓய்வூதியதாரர்களுக்காக மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
ஓய்வூதியதாரர் நலத்துறை செயலாளர் நிவேதிதா சுக்லா வர்மா, வடக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஓய்வூதியதாரர்களுக்கு எளிதில் சேவைகளை வழங்க ரயில்வே இந்த முகாமை நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338955®=3&lang=1
***
TV/PLM/SU