இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 11:38AM by PIB Chennai
எஃகு இறக்குமதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக 2026 நவம்பர் 25 அன்று புதுதில்லி நேதாஜி நகரில் உள்ள ஜிபிஓஏ-3 கட்டடத்தின் 3-வது தளத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய எஃகு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் நிறுவனங்கள், சங்கங்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைக்கலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், சங்கத்தின் பெயர், தொழில் பிரிவு, சிம்ஸ், சரல் சிம்ஸ் அல்லது கியூசிஓ விலக்கு தொடர்பான பிரச்சனையின் குறிப்பு, பங்கேற்பாளரின் பெயர், பதவி, தொடர்பு விவரங்களுடன் tech-steel[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 நவம்பர் 22 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் மூலம் ஒதுக்கப்படும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கலந்துரையாடலில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338875®=3&lang=1
***
SS/PD/SU