இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 1:37PM by PIB Chennai
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற இந்தியாவை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்தும் விவரிக்கும் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் எழுதிய அந்தக் கட்டுரையில், கடந்த 12 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவது குறித்தும், தொற்றுநோய்களில் இருந்து கால்நடைகள், கோழிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அவை முக்கியப் பங்கு வகிப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகள் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது எனவும் நோய்களால் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்படுகின்றன என்றும் இது விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் விவசாயக் குடும்பங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே தடுப்பூசிகளைத் தயாரிப்பது, கால்நடைப் பராமரிப்புத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனைக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். வலுவான, தற்சார்பு கொண்ட வேளாண் கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா கொண்டுள்ள உறுதியையும் இது வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338948®=3&lang=1
***
TV/PLM/SU