மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு திரைப்பட ரசிகர்களும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எளிதாகப் பங்கேற்பதை உறுதி செய்ய, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ‘ஸ்வயம்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றுகிறது. 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவைத் தொடர்ந்து இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவது இது மூன்றாவது முறையாகும். இதன் கீழ், விழா நடைபெறும் இதன் கீழ், விழா அரங்குகளில் தடையற்ற அணுகல் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பிறர் உதவியின்றி அணுகவும் வழிவகை செய்யப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் மரியாதையுடன் உரையாடுவது மற்றும் அவர்களுக்கு உரிய முறையில் உதவுவது குறித்து தன்னார்வலர்களுக்கு உணர்திறன் மற்றும் விழிப்புணர்வுப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாடும் திறன் குறைந்தவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தடைகளைப் பார்வையாளர்களும் விழா ஏற்பாட்டாளர்களும் நேரடியாக உணர்ந்து புரிந்துகொள்ளும் வகையில் ‘தடையற்ற அணுகல் மாதிரி மண்டலம்’ அமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி, இந்தியாவின் கலாச்சார மற்றும் திரைப்பட விழாக்களில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்று ஸ்வயம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திருமதி ஸ்மினு ஜிண்டால் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு தீரஜ் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338898®=3&lang=1
***
TV/SE/SU