மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளுக்கான டிஜிட்டல் அணுகல்: ஐநா சிறப்பு அறிக்கையாளருடன் மத்திய அரசு ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 10:40AM by PIB Chennai

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான டிஜிட்டல் அணுகல், உள்ளடக்கிய சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் திருமிகு ஹெபா ஹக்ராஸுடன் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. 2026 நவம்பர் 16 முதல் 25 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள திருமிகு ஹெபா ஹக்ராஸுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சகம், தேசிய தகவலியல் மையம், சி-டாக், தேசிய மின்னணு ஆளுகைப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு நந்த் குமாரும் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016, தேசிய மின்னணு அணுகல் கொள்கை, 2013 குறித்து விளக்கப்பட்டது. மத்திய அரசின் இணையதளங்களுக்கான வழிகாட்டுதல்கள், 73 அமைச்சகங்கள் பெற்றுள்ள தரச் சான்றிதழ்கள், 1,800-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பயன்படும் அணுகல் வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பன்மொழி அணுகலுக்கான பாஷிணி, 23 மொழிகளில் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கும் உமாங் செயலி, நமஸ்தே பாரத் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டி, அறிவு வளர்ச்சி குறைபாடுடையவர்களுக்கான திவ்யாங் சாரதி கற்றல் தளம் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338864&reg=3&lang=1  

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2338942) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी