சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 62-ஆக உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 10:45AM by PIB Chennai

போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டரை வயதுடைய கோம்ஜி 3 என்ற பெண் சிவிங்கிப்புலி, வனப்பகுதியில் இன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் கீழ், போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஒன்று குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல் முறை என மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.

இயற்கையான சூழலில் 4 மாதங்களுக்கும் மேலாக வனப்பகுதியில் வாழ்ந்த இந்தப் பெண் சிவிங்கிப்புலி, தற்போது குட்டிகளை ஈன்றுள்ளது. 2022-ம் ஆண்டில் சிவிங்கிப்புலிகள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, திறந்தவெளி வனப்பகுதியில் சிவிங்கிப்புலி குட்டிகளை ஈன்றிருப்பது இது 2-வது முறையாகும்.

இந்த 4 குட்டிகளின் பிறப்புடன், இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது. இதில் 43 சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் பிறந்தவை ஆகும். இது சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் முக்கிய சாதனை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இத்திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கும் வல்லுநர்கள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்களுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338867&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2338924) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Nepali , Gujarati