கோவாவின் பனாஜியில் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்த மாநிலம் முழுமையாகத் தயாராகிவிட்டது. விழா நடைபெறும் இடங்களிலும் தலைநகர் முழுவதிலும், 'எல்லைகளற்ற கதைகள்' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில், கலைப்படைப்புகள், திரைப்படச் சுருள் வடிவிலான நடைபாதைகள், பிரதிநிதிகளுக்கான தகவல் மையங்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை கைவினைக் கலைஞர்களும் விழா ஒருங்கிணைப்புக் குழுவினரும் முழுமையாக மேற்கொண்டுள்ளனர்.
57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவை முன்னிட்டு, கோவாவின் தலைநகரம் திரைப்படம், கலாச்சாரத்தின் கண்கவர் மையமாக உருமாறியுள்ளது. இஎஸ்ஜி வளாகம், கலா அகாடமி, பனாஜியின் வீதிகள் உள்ளிட்ட விழாவின் முக்கிய இடங்கள், இந்தியாவின் வளமான திரைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நுணுக்கமான கருப்பொருள் சார்ந்த அலங்காரங்களால் மெருகேற்றப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338688®=3&lang=1
****
TV/BR/SH