சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 1:01PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நவம்பர் 6-ம் தேதியுடைய வரைவு அரசிதழ் அறிவிக்கை ஜிஎஸ்ஆர் 985 (இ) மூலம் 1945-ம் ஆண்டு மருந்து விதிமுறைகளின் ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. இதில் மருத்துவ வாயுக்கள், காலி ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், கிருமி நாசினி திரவங்கள் ஆகிய சில மருந்துகளுக்கு திருத்தப்பட்ட அட்டவணை எம்-ன் கீழ் ஒழுங்குமுறை நெகழ்வுதன்மையை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஜிஎஸ்ஆர் மூலம் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட அட்டவணை எம்-ன் சில விதிமுறைகள் பொருந்தக்கூடியதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2026 பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் 93-வது கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. திருத்தப்பட்ட அட்டவணை எம்-ன் கீழ் உள்ள சில தேவைகள், மருத்துவ வாயுக்கள், காலி ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், கிருமி நாசினி திரவங்களின் உற்பத்தி செயல்முறைகளுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று அக்குழு கருதியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338313®=3&lang=1&_gl=1
***
SS/IR/PS/SH