சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 1:02PM by PIB Chennai
மருந்து பொருட்களின் சேமிப்பு, விநியோக நடைமுறைகளின் வழிகாட்டுதல்களை 1945-ம் ஆண்டின் மருந்து விதிமுறைகளில் இணைப்பதற்கு மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரிடமிருந்து நோயாளிக்கு விநியோகிக்கப்படும் வரை மருந்து பொருட்களின் தரம், பாதுகாப்பு, செயல்திறன், நம்பகத்தன்மை ஆகியவை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது இந்த முன்மொழிவின் நோக்கமாகும். இதற்கான வழிகாட்டுதல்கள், கொள்முதல், வாங்குதல், சேமித்தல், விநியோகம், போக்குவரத்து, ஆவணப்படுத்துதல், பதிவேடுகளை பராமரித்தல் உள்ளிட்ட விநியோக நடைமுறைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் மருந்து பொருட்களின் தரம், அடையாளம் ஆகியவற்றை உறுதிசெய்ய முயற்சிக்கின்றன.
உற்பத்தி சூழலுக்கு அப்பால் மருந்து பொருட்களின் தரம், நம்பகத்தன்மையை பாதுகாக்க பொருத்தமான சேமிப்பு, விநியோக சூழல்களை பராமரிப்பது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338316®=3&lang=1&_gl=1
***
SS/IR/PS/SH