மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பகிரப்பட்ட ஜனநாயக நடைமுறைகள் இந்தியா-அமெரிக்கா பொருளாதார ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 4:54PM by PIB Chennai

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பகிரப்பட்ட ஜனநாயக நடைமுறைகள் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 23-வது இந்தியா-அமெரிக்கா பொருளாதார உச்சிமாநாடு 2026-ல் இன்று (நவம்பர் 19, 2026) உரையாற்றிய அவர், வலுவான ஜனநாயக அமைப்புகள், நிலையான கொள்கைகள் மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்த தொழில்துறையினரும், பல்கலைக்கழகங்கள், ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் இளம் திறமையாளர்கள், விரிவடைந்து வரும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முதலீடு மற்றும் கூட்டாண்மைக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்று திரு ஓம் பிர்லா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை எட்டி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் தூய்மை எரிசக்தி ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய நலனுக்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338522®=3&lang=1&_gl=1

****

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338674) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati