இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:42PM by PIB Chennai
இந்தியா மற்றும் மலேசியா இடையிலான 6-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘ஹரிமாவ் சக்தி-6’, மலேசியாவின் ஈப்போவில் இன்று (நவம்பர் 19, 2026) தொடங்கியது. நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த தலா 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா மற்றும் மலேசியாவில் சுழற்சி முறையில் நடத்தப்படும் இப்பயிற்சி, ஐநா சபையின் சாசனம் அத்தியாயம் 7-ன் கீழ், வனப்பகுதி மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இப்பயிற்சியில் கூட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைத்தல், அதிரடி தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், போர் பொறியியல் பயிற்சிகள் மற்றும் உளவு பார்த்தலுக்கான ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS), எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பங்கள் (C-UAS) ஆகியவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெறுகின்றன. கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையுடன் நிறைவடையும் இப்பயிற்சி, இரு நாட்டு ராணுவங்களிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338498®=3&lang=1&_gl=1
****
TV/SE/SH